ஏனோ என் நெஞ்சம் சிறு பிள்ளையாகவே உள்ளது இன்னும் சில தினங்களில் என் அண்ணன் பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை ஆரம்பம்.
இவர்களுக்கு போகோ,சுட்டி டிவி,கணினி விளையாட்டு மட்டுமே உலகம்..???!!!
இவர்களிடம் இவர்கள் தொலைத்த வாழ்வை யார் கூறுவார்கள்???
.
இன்றும் வீட்டிற்கு சென்றால் தெருவில் நான் விளையாடிய காலங்கள் நிழலாடும்
இவர்கள் தொலைத்ததென்ன??? என்ற வினாவிற்கு பதில் எனது ஏக்ககங்களின் வெளிப்பாடாக இதோ
காலை எழுந்தவுடன் ஆரம்பமாகும் பம்பரம்,கோலி, கிட்டி பில் (கில்லி ) பாண்டி,
7 - டீசே,cycling ,வட்டு (tyre உருட்டுவது ) நுங்கு வண்டி ஈர் குச்சியில் செய்த 'வில்- அம்பு',தாமிரபரணியில் விளையாடிய நீர் ஆட்டங்கள், நாங்களே சச்சின்,டிராவிட் என்று பெயர்வைத்து விளையாடிய கிரிக்கெட் மழையிலே விட்ட காகித ஓடங்கள்..வயல் வரப்புகளில் விழாமல் ஓடிய தருணங்கள்..
இவை மட்டுமல்ல அறிவியல் சார்ந்தவை எங்களது ஆட்டங்கள்...
பாலிதீன் பையில் கல்லை கட்டி மேலே உயர எரிந்து "நியூட்டன்" விதிகளையும் கற்றோம்,மண்ணில் காந்தத்தை உருட்டி மக்னேடிசம் பயின்றோம் வீட்டின் கதவுகளை திறப்பதற்கு கயிற்றில் திறப்பான் செய்தோம்.
யாருக்கும் தெரியாமல் வீட்டின் மாடியில் நான் செய்த சேமிகள் ஆராய்ச்சி..!!
தெளிவான MANAGEMENT கொள்கைகள் கொண்ட BANK விளையாட்டு..சிறுக சேர்த்து வைத்த "சஞ்சயிக்க"..இரவில் மின் தடையானால் விளையாடும் "கல்லா மண்ணா??" தொட்டு பிடித்து இன்னும் பல...
இப்பொழுது இவர்களின் பலருக்கு "குற்குறேவும்,லய்சும்" தான் தெரியும். எங்களுக்கே உரிதான தேன்மிட்டாய்.ஜவ்வு மிட்டாய்,கல்கோனா, காசு மிட்டாய் ( காசு மிட்டாயில் 50 பைசா கிடைக்க பெற்றவன் எங்களில் மிக கௌரமானவன்.) அப்பள பூ (10 விரல்களிலும் சொருகி உண்டு மகிழும் தருணம் உலகை வென்றதற்கு சமம்). 1௫ க்கு கை நிறைய வாங்கும் நெல்லிக்கனி..மரம் ஏறி பறித்த புளியம்பழம்,நாவல்..குற்றாலம் செல்லும் பொழுது திருட்டுத்தனமாக பறித்த மாங்காய்..
இன்னும் பல உண்டு ஞாபகம் வரவில்லை....இவற்றில் பல இப்பொழுது உள்ள குழந்தைகள் அறிந்திருக்க மாட்டார்கள்...
இன்னும் சிறு பிள்ளையாக வாழ ஆசை :)
No comments:
Post a Comment