Saturday, 28 April 2012

அம்மா  : சாப்பிடமா என்னடா கம்ப்யூட்டர்ல  நோண்டிட்டு இருக்க ???
விக்னேஷ் : facebookல இருக்கேன் மா இதோ வரேன்..
அம்மா : அப்படி என்னதான் இருக்கு அந்த facebookல ??? நானும் பாக்குறேன்..(seeing my chat with my friend) and continues...
ஏன்டா இப்படி கடலை போடறதுக்குதான் facebookஆ ???
விக்னேஷ் : அப்படில இல்லாம சும்மா பேசிட்டு இருக்கேன் அவ்ளோதான் 
அம்மா : நீ சரி இல்ல..இப்படி கடலைப்போட்டு யாரையாவது லவ் பண்றேன் அது இதுன்னு வராத!!!! நா பாக்குற பொண்ண தான் நீ கல்யாணம் பண்ணனும் இப்பவே உன்ன எல்லாரும் ஆந்திரா மாப்ளை அது இதுன்னு கிண்டல் பண்றாங்க பாத்துக்கோ அப்பறம் அம்மா சப்போர்ட் பண்ண மாட்டேன் உங்க அப்பா சப்போர்ட் பண்ணினா எல்லாரும் ஓடிருங்க
விக்னேஷ் : அம்மா பசிக்குது சாதம் please....( shabba topic changed great escape...) 

Friday, 27 April 2012

சிறு எண்ணம்

இரண்டு முறை இன்று மனதிற்குள் ஒரு சிறு எண்ணம் தோன்றியது :
நண்பர்களுடன் முகநூளில் கதைத்து கொண்டிருக்கும்பொழுது எப்பொழுதும் எனது உரையாடலில் உணவிற்கு ஒரு இடம் உண்டு....சிறு வயது முதல் இந்த பழக்கம் என்னிடத்தே உண்டு அதுக்காக "சாப்டீங்களா  சித்தப்பு" னு கேட்க மாட்டேன் :P இது தான் என் மனதில் உதித்த எண்ணம் " எல்லா டெக்னாலஜியும் வளர்ந்திடுச்சு இந்த அறிவாளிகள் ஏன் இன்னும் உணவை transfer பண்ணும் டெக்னாலஜி கண்டுபிடிக்கலா????? கண்டுபிடித்திருந்தால் அம்மா வைத்த அவியலும் உப்மாவும் என் நண்பர்களுக்கு கொடுத்திருக்கலாம் :(

Monday, 26 March 2012

இன்றைய நிதி நிலை அறிக்கையின் பகுதி :



*நகர்புறங்களில் குறைந்த நடுத்தர வருவாய் பிரிவினருக்கு வீடுகள் வழங்க சிறப்புத்திட்டம்;

*மின் சக்தியால் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கு 5 சதவிதமாக வரி குறைப்பு;
மின் சிக்கன விளக்குகளுக்கான வரி 5%ஆக குறைப்பு;

*அனைத்து வகையான மதுபானங்களுக்கும் 14.5% விற்பனை வரி;

*ஆவணங்களுக்கான முத்திரை தீர்வை 6%லிருந்து 5%ஆக குறைப்பு;

*வாகனங்களுக்கு விருப்ப எண்களை பதிவு செய்ய கட்டணம் இரு மடங்காக அதிகரிப்பு;

*சொத்துக்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு ஏப்ரல் 1 முதல் அமல்
சொத்துக்களுக்கான முத்திரை கட்டணம் 6% இருந்து 5%ஆக குறைப்பு

*உரிமையியல் நீதிமன்ற காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்;
42 விரைவு நீதிமன்றங்கள் நிரந்தர நீதிமன்றங்களாக மாற்றப்படும்

*சாலைகள் பராமரிப்புக்கு ₨1180.95 கோடி ஒதுக்கீடு;
சாலைகளை அகலப்படுத்த ₨740 கோடி;
1500கி.மீ.தூர சாலைகள் அகலப்படுத்தப்படும்;
நெடுஞ்சாலை துறைக்கு ₨5651.68 கோடி நிதி ஒதுக்கீடு;
13 மாவட்டங்களில் கனகர வாகன பயிற்சி பள்ளி அமைக்கப்படும்

*கடனை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன்
2வது பசுமை புரட்சி ஏற்படுத்த தொலைநோக்கு திட்டம்;
வேளாண்மை துறைக்கு ₨3804.96 கோடி நிதி ஒதுக்கீடு;
தோட்டக்கலை உற்பத்திக்காக ₨25.1 கோடி ஒதுக்கீடு;
விவசாய காப்பீட்டு திட்டத்தின்கீழ் 10 லட்சம் விவசாயிகளை கொண்டுவர இலக்கு

*உரங்களுக்கு மதிப்புக்கூட்டு வரியிலிருந்து விலக்கு;
உரங்கள் வாங்குவதற்கான வட்டியில்லா கடன் ₨150 கோடியாக உயர்த்தப்படும்;

*கழிவுநீர், சுத்திகரிப்பு நிலையங்களை நவீன முறையில் மாற்ற நடவடிக்கை;
இதற்காக ₨200 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும்

*பேருந்து கட்டண உயர்வால் போக்குவரத்து நிறுவனங்கள் மேம்பட்டு வருகின்றன;
3000 புதிய பேருந்துகளை வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது;
பேருந்து நடத்துனர்களின் பணிச்சுமையை குறைக்க மின்னணு பயணச் சீட்டு முறை
புதிதாக 3000 பேருந்து வாங்க ₨548 கோடி ஒதுக்கீடு;

*மாநிலத்தில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த ஒருகிணைந்த புதிய திட்டம்;
கிழக்கு கடற்கரை வழி தடத்தில் சிறப்பு சுற்றுலா திட்டம்

*உடன்குடி அனல்மின் நிலையம் ₨8000 கோடி செலவில் தமிழக அரசால் நிறைவேற்றப்படும்;
புதிய மின் திட்டங்களுக்கு ₨1500 கோடி நிதி ஒதுக்கீடு
*தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு ₨3068.78 கோடி மானியம்

*தமிழ்நாடு கம்பிவட தொலைக்காட்சி சேவையில் 40 லட்சம் வாடிக்கையாளர்கள்;
கம்பிவட தொலைக்காட்சி சேவை விரைவில் சென்னைக்கும் விரிவுபடுத்தப்படும்

*அரசு ஊழியர்களுக்கான வீட்டு வசதிக் கடன் ₨15 லட்சத்திலிருந்து ₨25 லட்சமாக உயர்வு;
அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகை ₨4 லட்சமாக உயர்வு
*₨400 கோடி செலவில் 4,340 காவலர் குடியிருப்புகள் கூடுதலாக கட்டப்படும்

Monday, 19 March 2012

ஏக்கம்


ஏனோ என் நெஞ்சம் சிறு பிள்ளையாகவே உள்ளது இன்னும் சில   தினங்களில்    என் அண்ணன் பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை ஆரம்பம்.
இவர்களுக்கு போகோ,சுட்டி டிவி,கணினி விளையாட்டு  மட்டுமே உலகம்..???!!!
இவர்களிடம் இவர்கள் தொலைத்த வாழ்வை யார்  கூறுவார்கள்???
.
இன்றும் வீட்டிற்கு சென்றால் தெருவில் நான் விளையாடிய காலங்கள் நிழலாடும்
இவர்கள் தொலைத்ததென்ன??? என்ற வினாவிற்கு பதில் எனது ஏக்ககங்களின் வெளிப்பாடாக இதோ
காலை எழுந்தவுடன் ஆரம்பமாகும் பம்பரம்,கோலி, கிட்டி பில் (கில்லி  ) பாண்டி,
7 - டீசே,cycling ,வட்டு (tyre உருட்டுவது ) நுங்கு வண்டி ஈர் குச்சியில் செய்த 'வில்- அம்பு',தாமிரபரணியில் விளையாடிய நீர் ஆட்டங்கள், நாங்களே சச்சின்,டிராவிட் என்று பெயர்வைத்து விளையாடிய கிரிக்கெட் மழையிலே விட்ட காகித ஓடங்கள்..வயல் வரப்புகளில் விழாமல் ஓடிய தருணங்கள்..


இவை மட்டுமல்ல அறிவியல் சார்ந்தவை எங்களது ஆட்டங்கள்...

பாலிதீன் பையில் கல்லை கட்டி மேலே உயர எரிந்து "நியூட்டன்" விதிகளையும் கற்றோம்,மண்ணில் காந்தத்தை உருட்டி  மக்னேடிசம் பயின்றோம் வீட்டின் கதவுகளை திறப்பதற்கு கயிற்றில்  திறப்பான் செய்தோம்.
யாருக்கும் தெரியாமல் வீட்டின் மாடியில் நான் செய்த சேமிகள்  ஆராய்ச்சி..!!
தெளிவான MANAGEMENT கொள்கைகள் கொண்ட  BANK விளையாட்டு..சிறுக சேர்த்து வைத்த "சஞ்சயிக்க"..இரவில் மின் தடையானால் விளையாடும் "கல்லா மண்ணா??" தொட்டு பிடித்து இன்னும் பல...

இப்பொழுது இவர்களின் பலருக்கு "குற்குறேவும்,லய்சும்" தான்  தெரியும். எங்களுக்கே உரிதான தேன்மிட்டாய்.ஜவ்வு மிட்டாய்,கல்கோனா, காசு மிட்டாய் ( காசு மிட்டாயில் 50 பைசா கிடைக்க பெற்றவன் எங்களில் மிக கௌரமானவன்.) அப்பள பூ (10  விரல்களிலும் சொருகி உண்டு மகிழும் தருணம் உலகை வென்றதற்கு சமம்). 1௫ க்கு கை நிறைய வாங்கும் நெல்லிக்கனி..மரம் ஏறி பறித்த புளியம்பழம்,நாவல்..குற்றாலம் செல்லும் பொழுது திருட்டுத்தனமாக பறித்த மாங்காய்..
இன்னும் பல உண்டு ஞாபகம் வரவில்லை....இவற்றில் பல இப்பொழுது உள்ள குழந்தைகள் அறிந்திருக்க மாட்டார்கள்...
இன்னும் சிறு பிள்ளையாக வாழ ஆசை :)

Saturday, 30 July 2011

good wishes

Hi friends....this is the right time for me to write my stuffs and thoughts....please forgive me for my mistakes in grammar and vocabulary.,
may the almighty brings us all the success...i need your replies and comments often for my better improvement